செங்கம் அருகே ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்கமாட்டோம்: விவசாயிகள் உறுதிமொழி ஏற்பு

செங்கம்: செங்கம் அருகே 8 வழிச்சாலைக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.திருவண்ணாமலை   மாவட்டம், செங்கம் தாலுகா அளவில் 8 வழி சாலை திட்டத்தால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகிறது. இதில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், பாலங்கள்,  குடிசை வீடுகள், விவசாய பயிர்கள், மரங்கள், தோப்புகள் என பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது.

 தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள்  ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் முறையாறு கிராமத்தில் நேற்று நடந்தது.  இதில் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, 8 வழிச் சாலை  திட்டத்தால் பாதிக்கப்படும் அனைத்து கிராமங்களிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எத்தனை  அடக்கு முறைகள் வந்தாலும்  8 வழி  சாலை திட்டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம் என  உறுதி மொழி எடுத்து கொண்டனர். கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: