மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் உருவச்சிலையை பாட்னாவில் திறந்து வைத்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பாட்னா: மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் உருவச்சிலையை பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி கடந்த காலமானார்.பின்னர் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அருண் ஜெட்லி ஒரு திறமையான மனிதர். அவர் அரசாங்கத்தின் அமைச்சக பொறுப்புகளை திறமையாகவும், சாதுர்யமாகவும் கையாண்டவர். மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். மேலும் ஆண்டுதோறும் அருண் ஜெட்லியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அதன் அடிப்படையில் சிலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நிறைவு பெற்றன.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பீகார் தலைநகர் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர், அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related Stories: