முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு : மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

சென்னை : முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக, அமைதியாக நடைபெற்று வருகிறது என்றும் சில சில இடங்களில் சிறிய சிறிய குறைபாடுகள் இருப்பதாகவும் புகார் வந்ததை அடுத்து உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விருதுநகர் - 8.52%, திண்டுக்கல் - 5.6%, திருப்பூர் - 8.58%, திருச்சி - 16%, தருமபுரி - 10%, கரூர் - 14.48%, நாகை - 9.21%, மதுரை - 8%, திருவாரூர் - 12. 84%, தூத்துக்குடி -9.80% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

Related Stories: