மருத்துவக் கல்லூரிகளில் கவுரவ பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு ஏற்படும்: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் கூறினார். இதுகுறித்து அவர், சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் என்பது கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது. பணி அனுபவம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது மருத்துவக் கல்வி இயக்ககம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் மூலம், தற்காலிகமாக கவுரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கு  ஊதியம்  நிர்ணயிக்கவும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 8 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். போராட்டத்தை நசுக்கியதோடு, கோரிக்கைகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பேராசிரியர் பற்றாக்குறை என்ற பொய்யான காரணத்தைக் கூறி, வேண்டியவர்களை நியமிக்க சுகாதாரத்துறை முயல்கிறது. மருத்துவப் பணியாளர் நியமன ஆணையம் (எம்ஆர்பி) என்ற அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் மருத்துவர்களை நியமிக்காமல், நேரடியாக கவுரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் பாரபட்சப் போக்குகளுக்கும் வழி வகுக்கும்.

Related Stories: