அமேசான், நெட்பிளிக்ஸ் 100 நாட்கள் வரை படங்களை வெளியிடக்கூடாது: திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கோவை: அமேசான், நெட்பிளிக்ஸ் 100 நாட்கள் வரை படங்களை வெளியிடக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாகவே திரையிடப்பட்ட புதிய திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்று தரவில்லை. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நோக்கத்துடன் இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள்,

விநியோகஸ்தர்கள் சங்க கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தமிழாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சத்திய சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கோவை ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்த்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதாவது; உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை நடிகர்கள் ஏற்று தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். திரைப்படங்கள் வெளியான 100 நாட்களுக்கு பிறகு தான் நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில்  வெளியிட வேண்டும்; 100 நாட்களுக்குள் அமேசான், நெட்பிளிக்ஸ் படம் வெளியானால் குறிப்பிட்ட தயாரிப்பாளர்களின் படங்களை வெளியிடமாட்டோம்.

தமிழக அரசு விதிக்கக்கூடிய 8 % கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; 8 % கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் மார்ச் 1 முதல் திரையரங்கங்கள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Related Stories: