×

மெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது.

ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : scientists ,Mexico , Mexico, sea, 3,000 feet deep, a walkable fish
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு