ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் விராட் கோலி: 13-வது இடம் ரஜினிகாந்த்

டெல்லி: ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இதழான ஃபோர்ப்ஸ், ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவற்றினை  பிரபலங்களின் ஆண்டு வருமானம், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தாண்டுக்கான பட்டியலில் ரூ.252.72 கோடி வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2018 அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் 2019 செப்டம்பர் 30-ம் தேதி வரை கணக்கிடப்பட்டு  தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாதம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2-ம் இடமும், கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த சல்மான் கான் தற்போது 3-ம் இடமும் பிடித்துள்ளனர். நடிகர் அமித்தாப் பச்சன், கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக்கான் ஆகியோர்  அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழக திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆகியோரும் இடம்  பிடித்துள்ளர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.

டாப் 10 பிரபலங்கள்:

கிரிக்கெட் வீரர் விராட் கோலி - 01வது இடம் (ரூ.252.72 கோடி ஆண்டு வருமானம்)  

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்- 02வது இடம் (ரூ.293.25 கோடி ஆண்டு வருமானம்)  

பாலிவுட் நடிகர் சல்மான் கான்- 03வது  இடம் (ரூ.229.25 கோடி ஆண்டு வருமானம்)  

பாலிவுட் நடிகர் அமித்தாப் பச்சன்- 04வது இடம் (ரூ.239.25 கோடி ஆண்டு வருமானம்)

கிரிக்கெட் வீரர் தோனி - 05வது இடம் (ரூ.135.93 கோடி ஆண்டு வருமானம்)  

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 06வது இடம் (ரூ.124.38 கோடி ஆண்டு வருமானம்)

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 07 வது இடம் (ரூ.118.2 கோடி ஆண்டு வருமானம்)

பாலிவுட்  நடிகை அலீயா பட்- 08வது இடம் (ரூ.59.21 கோடி ஆண்டு வருமானம்)

கிரிக்கெட் வீரர் சச்சின் - 09வது இடம் (ரூ.76.96 கோடி ஆண்டு வருமானம்)

பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் 10வது இடம் (ரூ.76.96 கோடி ஆண்டு வருமானம்)

டாப் 100 பட்டியலில் தமிழக பிரபலங்கள்:

நடிகர் ரஜினிகாந்த் - 13 வது இடம் (ரூ.100 கோடி ஆண்டு வருமானம்)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - 16 வது இடம் (ரூ.94.8 கோடி ஆண்டு வருமானம்)

நடிகர் விஜய் - 47வது இடம் (ரூ.30 கோடி ஆண்டு வருமானம்)

நடிகர் அஜித்குமார் - 52வதுஇடம் (ரூ.40.5 கோடி ஆண்டு வருமானம்)

நடிகர் இயக்குநர் சங்கர் - 55வது இடம் (ரூ.31.5 கோடி ஆண்டு வருமானம்)

நடிகர் கமல்ஹாசன் - 56வது இடம் (ரூ.34 கோடி ஆண்டு வருமானம்)

நடிகர் தனுஷ் - 64வது இடம் (ரூ.31.75 கோடி ஆண்டு வருமானம்)

இயக்குநர் சிறுத்தை சிவா - 80வது இடம் (ரூ.12.17 கோடி ஆண்டு வருமானம்)

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் - 84வது இடம் (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்)

டாப் 100 பட்டியலில் விளையாட்டுத் துறை வீர்ர்கள்; வீராங்கனைகள்:

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா - 11வது இடம் (ரூ.54.29 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் - 30வது இடம் (ரூ.29.19 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா - 31வது இடம் (ரூ.24.87 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் பும்ரா - 33வது இடம் (ரூ.23.25 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - 34வது இடம் (ரூ.23.19 கோடி ஆண்டு வருமானம்)

 

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் - 35வது இடம் (ரூ.19.11 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா - 51வது இடம் (ரூ.15.27 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீரர் குல்திப் யாதவ் - 61வது இடம் (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்)  

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து - 63வது இடம் (ரூ.21.05 கோடி ஆண்டு வருமானம்)  

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் - 81வது இடம் (ரூ.3 கோடி ஆண்டு வருமானம்)  

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் - 87வது இடம் (ரூ.3.9 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் - 88வது இடம் (ரூ.2.63 கோடி ஆண்டு வருமானம்)  

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா - 90வது இடம்  (ரூ.2.8 கோடி ஆண்டு வருமானம்) 

Related Stories: