திருப்பரங்குன்றத்தில் அதிமுக-அமமுக தொண்டர்கள் மோதல்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 324 ஊராட்சி வார்டுகள், 38 ஊராட்சி தலைவர்கள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மனு பரிசீலனையின்போது அதிமுக சார்பில் 14வது வார்டில் போட்டியிடும் நிலையூர் முருகனுக்கு, இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அமமுக வேட்பாளர் ராமன், மதிமுக வேட்பாளர் மருதுபாண்டி ஆகியோர் முறையிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி, சேர்களை எடுத்து வீசினர். கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: