சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடி விபத்து: 14 பேர் உயிரிழப்பு... மீட்பு பணிகள் தீவிரம்

பெய்ஜிங்: சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். குய்ஷோ மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளாளர்கள் அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினர். இருப்பினும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் விபத்தில் 14 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான பகுதியில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: