எர்ணாவூர் முல்லைநகரில் பஸ் நிறுத்த நிழற்குடை திடீர் மாயம்

திருவொற்றியூர்: எர்ணாவூர் முல்லை நகர் பஸ் நிறுத்ததில்  மாநகராட்சி பொது நிதியில் இருந்து ₹5 லட்சம் செலவில் நவீன நிழற்குடை அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்த நிழற்குடை நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாயமானது. நேற்று காலை இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார், நிழற்குடையை பெயர்த்து எடுத்து சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நிழற்குடையை  நாங்கள் அப்புறப்படுத்தவில்லை. யார் எடுத்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. விசாரிக்கிறோம், என்றனர். அதேபோல் நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் நிழற்குடை எப்படி மாயமானது என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: