தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெறும் உணவு திருவிழாவை காண அலைமோதும் மக்கள் கூட்டம்

* தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை

* இன்று கடைசி நாள்

சென்னை: தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவை  காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சென்றனர். மனித உடலின் ஆரோக்கியம் சாப்பிடும் உணவு பொருட்களைதான் சார்ந்துள்ளது. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல்வேறு உணவு பொருட்களை தேடிச் சென்று பொதுமக்கள் வாங்குகின்றனர். இவ்வாறு தேடிச் சென்று பல்வேறு உணவு பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு ஏதுவாக அனைத்து உணவு பொருட்களை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் உணவுத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றுவருகிறது. தினகரன் நாளிதழுடன் இணைந்து எவரெஸ்ட் மசாலா, மெசின் பேக்டரி, சன் இன்டஸ்ட்ரீஸ், பீதாம்பரி புராடெக்ட், தன்யா அசோசியேட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

உணவுத் திருவிழாவில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம், மசாலா பொருட்கள், தேன், பெருங்காயம், எவரெஸ்ட் மசாலா பொருட்

கள் உள்ளிட்ட சமையல்களுக்கு தேவையான பொருட்கள் என விற்பனை செய்ய 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2து நாளான நேற்று கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம் வாங்கும் பொருட்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் வழங்கியதால் பலர் போட்டிப் போட்டு தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் தினகரன் நாளிதழ் சார்பாக அரங்கிற்கு வந்த பொதுமக்களுக்கு மில்கா ஒன்டர் கேக், பிளன்டி மசாலா டீ தூள் பொடி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இன்று நிறைவு நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி கொள்ளலாம். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு நிறுவனமும் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன.

முடிச்சூர், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த அனுசுயா கூறுகையில்: நந்தம்பாக்கம் வர்த்தக  மையத்தில் உணவு திருவிழா நடப்பது குறித்த செய்தியை தினகரன் நாளிதழில்  படித்து பெற்றோருடன் இங்கு வந்தேன். இந்த கண்காட்சியில்  சமையலறைக்கு தேவையான கேஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் காம்போ முறையில்  குறைந்த விலையில் விற்கப்படுகிறது.மேலும் சத்து உணவு பொருட்கள், பானங்கள், இயற்கை உணவு வகைகள், மசாலா போன்ற பொருட்கள் அனைத்தும்  தரமாகவும் விலை குறைத்தும், தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. அதேபோல் செக்கு எண்ணெய், காட்டு தேன் போன்றவற்றையும் வாங்கினோம்  என்றார். மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி கூறுகையில்: இந்த உணவு திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்தோம். சந்தோஷமாக இருந்தது. அரங்கிற்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு  இட்லி சாம்பார், பில்ட்டர் காபி, பிஸ்கட், சிப்ஸ் என நொறுக்கிதீனிகளை கொடுத்து அசத்திட்டாங்க மொத்தத்தில் இது ஒரு திருவிழா தான். ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்கொடி கூறுகையில்: இந்த உணவு திருவிழாவில்   விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களையும்  சுவை பார்த்து வாங்க சொல்கிறார்கள் இது சந்தோஷமாக உள்ளது. ஊறுகாய், இனிப்பு உவர்பு, புளிப்பு போன்ற வகை வகையான சிப்ஸ்கள் நன்றாக இருந்தது என்றார்.

ருசியான சாம்பார் இட்லி

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘தினகரன்’ நாளிதழ் சார்பாக  உணவு திருவிழா  நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நடந்து வருகிறது.

உணவு திருவிழாவில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கும் உணவு பொருட்களின் தயாரிப்புகளை பொதுமக்கள் சாப்பிட்டு ருசித்துப் பார்க்க கொடுக்கிறார்கள். குறிப்பாக கேழ்வரகு, சாமை, கோதுமை, வரகு குதிரை வாளி போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சத்து பானங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை  பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

மேலும் பல வகையான சிப்ஸ்கள், கோதுமை அல்வா, இளநீர் அல்வா, கருப்பட்டி அல்வா மற்றும் ஊறுகாய் வகைகள் போன்றவற்றின் சாம்பிள்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்கள். அதே போல் பிரபல மசாலா நிறுவனமான எவரெஸ்ட் மசாலா நிறுவனத்தினர் கண்காட்சியினை பார்வையிட வரும் அனைவருக்கும்  மினி சாம்பார் இட்லி, சன்னா கிரேவி, சுண்டல் போன்றவற்றைச் சுடச், சுட வழங்குகிறார்கள். இதனை பார்வையாளர்கள் ருசித்து உண்டு செல்கின்றனர். அதே போல் பிரியாணி விற்பவர்கள் பார்வையாளர்களுக்கு பிரியாணியை சுடச்சுட வழங்குகிறார்கள்.

Related Stories: