அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், பருவ மழை வலுப்பெற்றதால் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நீர் நிலைகள் நிரம்பிப் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. தற்போது மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 14% குறைவு

அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னையில் 14% மழை குறைவாக பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் இயல்புநிலையை விட 6% அதிகமாக மழைப்பொழிவு பெய்துள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதமும், வேலூர் மாவட்டத்தில் 25 சதவீதமும் மழை குறைந்துள்ளது.

Related Stories: