சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய விளையாட்டு துறையின் மகுடத்தில் புதுப்புது வைரங்களைப் பதித்து மின்னிடச் செய்வதில் தமிழக வீரர்-வீராங்கனையரின் பங்கு மகத்தானது. நேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.