பங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை

புதுடெல்லி: மும்பை பங்குச் சந்தை வர்த்தகர்கள், புரோக்கர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில், மும்பை உள்ளிட்ட 39 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மும்பை பங்குச் சந்தை வர்த்தகர்கள், புரோக்கர்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித் துறையினருக்கு புகார்கள் வந்தன. அவர்கள் ரூ.3,500 கோடி அளவுக்கு முறையற்ற வகையில் பணபரிமாற்றத்தை செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் நாடு முழுவதும் 39 இடங்களில் அதிரடியாக வருமான வரிச் சோதனையில் ஈடுபட்டனர். மும்பை கொல்கத்தா, கான்பூர், டெல்லி, நொய்டா, குருகிராம், ஐதாராபாத், காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3ம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: