தேனி: நாட்டின் சிறந்த 10 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் தரவரிசை பட்டியலில், தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாட்டினை கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் தயார் செய்தது. இதில் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அகில இந்திய அளவில் 4வது இடமும், மாநில அளவில் முதலிடமும் கிடைத்துள்ளது.இதுகுறித்து தேனி எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி கூறியதாவது: நாடு முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்க வருபவர்களை நடத்தும்விதம், புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மனுதாரர்களை அழைத்து விசாரிப்பது, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, மகளிர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான முறையில் செயல்படுவது உள்ளிட்ட 20 விஷயங்கள் குறித்து கடந்த 4 மாதமாக ஆய்வுப்பணிகள் நாடு முழுவதும் நடந்தன.