வெஸ்ட் இண்டீஸ் உடனான முதலாவது டி20 போட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி : கேப்டன் கோஹ்லி அசத்தல் ஆட்டம்

ஐதராபாத் : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதலாவது டி-20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, அந்த அணியின் லெண்டல் சிம்மோன்ஸ் மற்றும் எவில் லீவிஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.. ஆரம்பத்திலேயே அடித்து ஆட முயன்ற சிம்மோன்ஸ் இரண்டாவது ஓவரில் தீபக் சாஹரின் பந்து வீச்சில் ரோகித்திடம் கேட்ச் ஆகி 2 ரன்னுடன் வெளியேறினார். அந்த அணியின் எவின் லீவிஸ்(40) , பிரண்டன் கிங் 31(23 ரன்) எடுத்தனர். கடைசிகட்டத்தில் ஹெட்மயரும், கேப்டன் பொல்லார்டும்  அதிரடி காட்டினர். அடித்து ஆடிய ஹெட்மயர் 56 ரன்(41), பொல்லார்ட்(37) ரன் எடுத்தனர். பின்னர் வந்தவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில் 20 ஒவர் முடிவில் வெஸ்ட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் என்கிற இமாலய ஸ்கோரை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் யோகேந்திர சாஹல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மாவும், ராகுலும் சவாலான ஸ்கோரை நோக்கி துரத்தலை தொடங்கினர். ஆனால், ஆரம்பத்திலேயே ரோகித் 8 ரன்னுடன் திருப்தி அடைந்துகாரி பியர்ரே பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். எனினும் அடுத்து வந்த கோஹ்லி, ராகுல் இணை நிலைமையை உணர்ந்து அற்புதமாக ஆடினர். இதனால் ரன்கள் வேகமெடுத்தது். அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 130 ஆக இருந்தபோது இந்த இணையை மீண்டும் காரி பியர்ரே பிரித்தார். லோகேஷ் ராகுல்(62 ரன்) 40 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்ரியை விரட்டிய பின் வெளியேறினார். அடுத்த வந்த ரிசப் பண்ட் ஒரு முனையில் நிற்க விராட் கோஹ்லி தனது மட்டையில் வேகம் காட்டினார். பந்துகளை நாளாபுறமும் சிதறடித்த அவர், 6 சிக்சர், 6 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதனால் ரன் வேகம் சற்றும் குறையாமல் இலக்கை நோக்கி வேகமாக சென்றது. 16.2 ஓவரின் போது பண்ட், கார்டெரல் பந்தில் ஹோல்டரிடம் கேட்சானார். அவருக்கு பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் வந்த வேகத்தில் 4 ரன்னுடன் வெளியேற்றப்பட்டார். ஷிவம் துபேவின் உதவியுடன் கேப்டன் கோஹ்லி 94 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related Stories:

>