மத்திய அரசின் தனியார் மயக்கொள்கை ரயில்வே துறையை முற்றிலும் அழிக்கும்: எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா பேச்சு

சென்னை: அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நேற்று முன்தினம் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா தலைமையில் துவங்கியது. 2வது நாளான நேற்று   ஏஐஆர்எப் பொதுச் செயலாளர் எஸ்.ஜி. மிஸ்ரா ரயில்வே போர்டு உறுப்பினர் அகர்வால் மற்றும் ஜான் தாமஸ் முன்னிலையில்  இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள், பெண்கள்  என ஏராளமானோர் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து  விளையாட்டுத்திடல் வரை ஊர்வலமாக வந்தனர். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா பத்திரிகையாளர்களிடம் பேசியது:  ஐசிஎப் போன்ற நிறுவனங்கள் அரசாங்க அமைப்பாக இருப்பதால் குறைந்த விலையில் தயாரிக்க முடிகிறது. எனவே தனியார் மயமாக்கலை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ரயில்வேயை முற்றிலும் அழித்துவிடும் மத்திய அரசின் ரயில்வே தனியார்மயக் கொள்கை தொழிலாளர் மற்றும் பொது மக்கள் நலனுக்கு விரோதமானது.

‘தனியார்மயமாக்க மாட்டோம்’

ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு பெரம்பூர் ரயில்வே விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியன் ரயில்வே போர்டு தலைவர் வினோத் குமார் யாதவ் பேசுகையில், ‘‘ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் நாடாளுமன்றத்தில் ரயில்வேயை தனியார்மயமாக்க மாட்டோம் என கூறியுள்ளார். மேலும் அந்த எண்ணமே எங்களுக்கு இல்லை’ என்றார்.

Related Stories: