பாலியல் குற்றங்களை தடுக்க ‘காவலன்’ செல்போன் செயலி

சென்னை: ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழக காவல் துறையில் ‘காவலன்’ செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். உதவி கோரி வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் சரக எல்லை போன்ற நடைமுறை சிக்கல்களை தாண்டி தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்படாத காவலர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக ஊரக பகுதி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். காவலன் கைப்பேசி செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வரும்  10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி, அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: