தமிழகத்தில் புதிதாக தொடங்கிய 6 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு 137 கோடி நிதி

சென்னை: தமிழகத்தில் விருதுநகர், திருப்பூர், உதகமண்டலம், திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியும் அனுமதி அளிக்க மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.  அதையேற்று, இந்த 6 மருத்துவ கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கி தமிழக அரசு ஏற்கனவே ஆணை வெளியிட்டது. இதையடுத்து மேற்கண்ட 6 மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கான செலவினங்கள் குறித்த மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் குடும்பம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் முதற்கட்டமாக மேற்கண்ட மருத்துவ கல்லூரிகளுக்காக 137 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது.

Related Stories: