தேர்தல் விதிகளில் திருத்தம் செய்த தகவல் அனைவருக்கும் செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பாக மாநில ேதர்தல் ஆணையர் பழனிசாமி அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடிந்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக மற்றும் நகர்புறங்களுக்கு என்று தனித்தனியாக ேதர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த நடத்தை விதிகளை அமல்படுத்துவ தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனசாமி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புதிய நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும்  உரிய முறையில் சென்றடையும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். மேலும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள அனைத்து கையேடுகளிலும் இந்த திருத்தங்களை மாற்ற செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

Related Stories: