கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று 50 ஆண்கள் மற்றும் 250 பெண் செவிலிய உதவியாளர்கள் திரண்டு, தங்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்குமாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு விரைந்து வந்து அவர்களது கோரிக்கைகள் குறித்து விசாரித்தார். உங்களது கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள், அதனை அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட செவிலிய உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில், அரசு மருத்துவ கல்லூரியில் படித்த செவிலிய உதவியாளர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு ஆயிரம் செவிலிய உதவியாளர்கள்  அரசு பயிற்சி பள்ளியில் படித்து முடிக்கிறார்கள். அவர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Related Stories: