கார்ப்பரேட் வரி குறைப்பு நிதியமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கவும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரியை 15 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை சட்டமாக்க வரி சட்டங்கள் திருத்த மசோதா விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகப்போரால், பல பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இடம் பெயர விரும்புகின்றன. அவற்றின் முதலீடுகளை கவர கார்பரேட் வரியை குறைக்க முத்திய அரசு முடிவு செய்தது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

Related Stories: