கொடைக்கானலில் 2 பெண்களை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு: மற்றொரு பெண் படுகாயம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் 2 பெண்களை யானை தாக்கியதில் ஒருவர் பலியாகி இருக்கிறார், மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடைக்கானல் அருகே மன்றக்கால்வாய் கிராமத்தில் தோட்டத்து வேலைக்கு சென்ற இரண்டு பெண்களை யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அப்பகுதியில் காப்பித்தோட்டத்தில் வேலை செய்த சரஸ்வதி மற்றும் ஜெயரத்னம் ஆகிய இருவரையும் யானை மிதித்து இருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஜெயரத்னம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து இருக்கிறார். மேலும் படுகாயமடைந்த சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் வனத்துறை சார்பில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் கீழ்மலைப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து நீடிப்பதால் இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் உட்கொள்ளப்பட்ட கன்னிவாடி பகுதி முழுவதும் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இது குறித்து வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு யானை விரட்டும் பணியானது அப்பகுதியில் நடைபெற்று கொண்டு வருகிறது. ஆனால் யானைகள் முழுவதும் அப்பகுதியை விட்டு வெளியேற மறுப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Related Stories: