அல்பேனியாவில் பூகம்பம் 16 பேர் பலி

திரானா: அல்பேனியா நாட்டில் நேற்று அதிகாலை பூகம்பம் ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. தலைநகர் திரானாவில் இருந்து வடமேற்காக 30 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு பூகம்பம் உருவாகி இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தன.

திரானாவில் பூகம்பம் காரணமாக அச்சமடைந்த வீட்டில் இருந்து கீழே குதித்து தப்பி முயன்ற ஒருவர் உயிரிழந்தார். துர்ரெஸ் பகுதியில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலியானார். துமானேவில் 3 மாடி கட்டிடமும், மின் விநியோக அலுவலகமும் சேதமடைந்தது. பல்வேறு பகுதிகளில் 16 பேர் இறந்தனர். மேலும், 150 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. அல்பேனியா கடல் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: