திருவிழா, பண்டிகை காலங்களில் கொள்ளையர்களை கண்காணிக்க சிறப்பு ரோந்து வாகனம்: சென்னை காவல் துறையில் விரைவில் அறிமுகம்

சென்னை: திருவிழா, பண்டிகை காலங்களில் கொள்ளையர்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு ரோந்து வாகனம் சென்னை காவல் துறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகர காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தி.நகருக்கு வந்து செல்கின்றனர். இந்த ஸ்மார்ட் சிட்டியில் வெளிநாடுகளில் உள்ளது போன்று பல நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், குற்றவாளிகளை கண்காணிக்க சென்னை மாநகர காவல் துறை சார்பில் காவலர் ஒருவர் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 3 வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் பயன்பாட்டை பொருத்து நகரம் முழுவதும் விரிவுப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த சிறப்பு வாகனத்ைத ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: