மகாராஷ்டிராவில் ஒருபுறம் பாஜக ஆட்சி கவிழ்த்தது.. மறுபுறம் இடைக்கால சபாநாயகராக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

மும்பை: மகாராஷ்டிரா பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருபுறம் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பாஜக எம்எல்ஏ- வான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியையும், அஜித்பவார் தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தனர். மஹாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள், சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்கள், தேசிய வாத காங்கிரசுக்கு 54 மற்றும் காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பாட்னவிஸ், சட்டப்பேரவையில் போதிய பலம் இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படும் என அறிவித்துள்ளார். அதேபோல் பாஜக எந்த கட்சியையும் உடைக்காது என்றும், குதிரை பேரத்திலும் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிர மக்கள் பாஜக கூட்டணி ஆட்சிக்கு தான் வாக்களித்தனர் என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திடீரென சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பேரம் பேசியது என குற்றம் சாட்டினார். முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தர சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் பாஜகவுடன் பேரம் பேசிக்கொண்டே மற்ற கட்சிகளுடன் சிவசேனா பேச்சு நடத்தியது எனவும் கூறியுள்ளார்.

இந்த 3 சக்கர அரசு நிலையானதாக இருக்குமா என்பது சந்தேகமே, இருப்பினும் பாஜக பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு மக்களுக்காக குரல் எழுப்பும் எனவும் கூயிருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோச்சாரியிடம் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் காரணமாக, சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே முதவராவது உறுதியானது. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் வகிப்பது தொடர்பாக சிவசேனா, காங்.,தேசியவாத காங். கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள காளிதாஸ் எம்எல்ஏகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: