டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திப்பு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றாலும்,  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனிடையே ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: