வீர‌மரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஓராண்டு வரை அரசு ஒதுக்கிய வீட்டில் வசிக்கலாம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

டெல்லி: வீர‌மரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரசு ஒதுக்கிய வீட்டில் ஓராண்டு வரை வசிக்கலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். முப்படைகளிலும் பணியாற்றி வரும் வீரர்களின் குடும்பத்தினர் தற்போதைய விதிமுறைகளின்படி எதிரிப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போதோ அல்லது எதிரிகளின் வான் தாக்குதலிலோ உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து அரசு குடியிருப்புகளில் வசிக்கலாம் என்ற கால அவகாசம் தற்போது ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..  

இந்நிலையில் போர்களத்தில் வீரமரணம் அடையும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்திருந்தார். ராணுவ போர் உயிரிழப்புகள் நல நிதியத்தில் (Army Battle Casualties Welfare Fund) இருந்து இந்த தொகை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Related Stories: