ஜிஎஸ்டி வருவாய் சரிவுக்கு போலி பில்தான் காரணம்

புதுடெல்லி: போலி பில்கள் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் குறைந்து வருகிறது என, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறினார்.   தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ‘‘தொழில் நிறுவனங்களுக்கு இடையே பொருட்கள் சப்ளை தொடர்பாக போலி பில்கள் போடப்படுகின்றன. இதனால் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். மற்றபடி வரி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் இப்போது இல்லை. வருவாய் தொடர்பான விசாரணைக்கு நேரில் அழைக்காமல் ஆன்லைனிலேயே தொடர்பு கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 58,322 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

Related Stories: