கமலும், நீங்களும் இணைந்தால் யார் முதல்வர்? நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பதில்

சென்னை: நீங்களும் கமலும் இணைந்தால் யார் முதலமைச்சர் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்புடன் பதில் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கோவாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நேற்று மாலை 4 மணி விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீங்கள் விருது வாங்கிவிட்டு வந்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் மன நிலை எவ்வாறாக உள்ளது. நான் நேற்று வாங்கிய விருதுக்கு தமிழ்மக்கள்தான் காரணம். எனவே அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அரசியலில் நீங்களும், கமலும் இணைந்து பணியாற்றப் போவதாக கூறியிருக்கிறீர்கள். அப்படி இணைந்தால் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள். அது தேர்தல் நேரத்தில் அப்போது எடுக்க வேண்டிய முடிவு. நான் கட்சி ஆரம்பிக்கும் போது என்னுடைய கட்சி உறுப்பினர்கள், நாங்கள் கூட்டு சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அப்போது நான் அதுபற்றி சொல்கிறேன். அது வரை அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.

நீங்களும், கமலும் இணைவது பற்றி தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்களே. அது அவர்களுடைய செயல். தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இது திராவிட பூமி. இங்கு ஆன்மிக அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியாக கூறுகிறாரே. அதுபற்றி உங்கள் பதில் என்ன? 2021ல் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள். இது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>