100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு களைய பயிற்சி: காங்கிரஸ் நடத்துகிறது

சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  காங்கிரஸ் தலைமையிலான அரசு கிராமப்புற ஏழை ஏளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்தியது. விவசாய வேலை இல்லாத காலங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஏரி, குளங்களை மராமத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம். இந்த திட்டத்தை சீரழிக்கும் முயற்சியில் ஊழல்வாதிகள் முயன்று வருகின்றனர்.

 கல்வி எழுத்தறிவற்ற அப்பாவி ஏழை தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி  கைநாட்டு வாங்கி, அவர்களின் ஊதியத்தை கொள்ளையடித்து வருகின்றனர். எனவே, இந்த திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய, தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கையெழுத்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>