கும்பல் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை : மத்திய அரசு

டெல்லி : கும்பல் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி என்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில்  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக மக்களவையில் உள்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் மக்களவையில் 2ம் நாள் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது,  இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சுப்பராயன், எம். செல்வராஜ் ஆகியோர் கும்பல் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், கும்பல் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும்  அந்த அறிக்கையில், சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான தகவல்களை சரிபார்க்கும்படி மக்களிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில் கூட்டமாக தாக்கும் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சில வழிகாட்டல்களை வழங்கியது.இத்தகைய குற்றங்களைத் தடுக்க நாடாளுமன்றம் தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த ஜூலை 17 மற்றும் 23 தேதிகளில் மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களில் மாநில அரசுகள் கும்பல் வன்முறைக்கு  எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Stories: