அண்ணன் கடனை திருப்பி தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை

பல்லாவரம்: பம்மல், அண்ணா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45). இவருக்கு திருமணமாகி பிரியா (40) என்ற மனைவி உள்ளார். புஷ்பராஜ் அதே பகுதியில் உள்ள கடைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். இவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் (48) என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், புஷ்பராஜிடம் இருந்து கடனாக 5 லட்சம் பெற்றுள்ளார். அதனை புஷ்பராஜ் பலமுறை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த புஷ்பராஜ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: