கார் டயர் வெடித்து விபத்து நடிகர் காயம்

திருமலை: தெலுங்கு திரைப்பட நடிகர் ராஜசேகர். இவர் தமிழில் இதுதாண்டா போலீஸ் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் - தெலுங்கு திரைப்பட கதாநாயகியாக நடித்த நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஐதராபாத்தில் வசிக்கின்றனர். ராஜசேகர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராமோஜி பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவர் நேற்று அதிகாலை தனது சொகுசு காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.

காரை அவரே ஓட்டி வந்தார். செம்ஷாபாத் மண்டலம்,  பெத்த கோல்கொண்டா பகுதி விஜயவாடா- ஐதராபாத் பைபாஸ் சாலை அருகே சென்றபோது காரின் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார், தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. காரில் இருந்த ஏர் பலூன் காரணமாக நடிகர் ராஜசேகர் லேசான காயங்களுடன்  உயிர் தப்பினார்.

Related Stories: