என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறபடுத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி  ரூ.50 கோடி செலவில் நடைபாதை அமைத்துள்ள நிலையில் அவற்றை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஆடிட்டர் வந்தனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதை சரியாக பராமரிக்கப்படவில்லை, மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கபட்டுள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாவதால் நடைபாதைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைப்பதிருப்பதாக கூறிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி நாளை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: