பயணிகள் வாகனம் மட்டும் உயர்வு,..கார், டூவீலர் விற்பனை தொடர்ந்து பின்னடைவு

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை மட்டும் கடந்த அக்டோபரில் 0.28 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கார், டூவீலர் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் இந்த துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசனும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதத்துக்கான கார் விற்பனை நிலவரத்தை சியாம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

 கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், 0.28 சதவீதம் சரிந்து 2,85,027 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
Advertising
Advertising

அதேநேரத்தில் கார் விற்பனை 6.34 சரிந்து 1,73,649 கார்களும், மோட்டார் சைக்கிள் விற்பனை 15.88 சதவீதம் சரிந்து 11,16,970 ஆகவும், ஒட்டு மொத்த பிரிவிலும் சேர்த்து டூவீலர் விற்பனை 14.43 சதவீதம் குறைந்து 17,57,264 ஆகவும் உள்ளது.  இதுபோல் வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 23.31 சதவீதம் சரிந்து 66,773 வாகனங்களும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்த வாகன விற்பனை 12.76 சதவீதம் சரிந்து 21,76,136 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என சியாம் தெரிவித்துள்ளது. அதாவது, பயணிகள் வாகனம் தவிர கார், டூவீலர் என அனைத்து பிரிவு வாகனங்களும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.

Related Stories: