டிஜிட்டல் மயம் என்னாச்சு? ஆன்லைனில் பெரும்பகுதி கேஷ் ஆன் டெலிவரிதான்: ரிட்டர்ன் ஆவதால் நஷ்டம்

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் விற்பனையாவதில் 65 சதவீத ஆர்டர்கள் கேஷ் ஆன் டெலிவரியாக உள்ளதாக புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.  ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதிலும், பண்டிகை சீசனில் அதிரடி தள்ளுபடியால் விற்பனை களைகட்டும். அதோடு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  இருப்பினும், இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் ஆர்டர் செய்வதில் 65 சதவீதம் கேஷ் ஆன் டெலிவரி (பொருட்களை டெலிவரி செய்யும்போது பணம் கொடுத்து பெறுவது) என தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இவ்வாறு கேஷ் ஆன் டெலிவரி செய்யும்போது அதில் 3ல் ஒன்று வாங்க ஆளில்லாமல் அல்லது வாங்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கே திரும்ப அனுப்பப்படுகிறது.

 பொதுவாக, பொருட்களை டெலிவரி செய்யாமல் ரிட்டர்ன் அனுப்பும்போது ஒரு பொருளுக்கு பார்சல் அளவுக்கு ஏற்ப 50 முதல் 150 வரை ஆகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என பார்சல் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. அதேநேரத்தில், கேஷ் ஆன் டெலிவரியில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் சில விற்பனையாளர்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில பொருட்கள் முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே டெலிவரி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>