இலவச மருத்துவ முகாம்

பெரம்பூர்:  திமுக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் பெரம்பூர் சிறுவள்ளூரில் நேற்று நடந்தது. இதில், ஏராளமா னோர்  கலந்து கொண்ட னர். மேலும், சிறுவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. இதில், மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து சிறுவர், சிறுமியர் பலவிதமான ஓவியம் வரைந்து அசத்தினர். முதியோர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில், சிவம் பவுண்டேஷன் நிறுவனர் எம்.வெங்கடேஷ், திருவிக நகர் திமுக பகுதி துணை செயலாளர் ராஜன் மற்றும் டாக்டர் எஸ்ரா சற்குணம், அண்ணாதுரை, முனைவர் கே.டி.தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: