வெடிக்கிறது புதிய சர்ச்சை: பாகிஸ்தானின் விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறைபிடிக்கப்படது போன்ற உருவபொம்மை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறைபிடிக்கப்படது போன்ற உருவபொம்மையை வைத்திருப்பதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் துரத்தி சென்றார். அப்போது அவரது விமானம் தாக்கப்பட்டது. இதனால் தனது விமானத்தில் இருந்து குதித்த அபிநந்தன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார். இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. 58 மணி நேரத்திற்கு பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அபிநந்தன் பணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவபொம்மை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அன்வர் லோதி என்பவர் டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய விமானப்படை சீருடையுடன் அபிநந்தன் நிற்பது போலவும் அவருக்கு பின்னால் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் நிற்பது போலவும் அந்த உருவபொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: