போலீஸ் சேனல்: நகைக்கடை கொள்ளையில் 25 பவுனை போலீசே அமுக்கிட்டாங்கய்யா... கொள்ளையன் தடாலடி

தமிழகத்தில் மலைக்கோட்டை மாநகரை பரபரப்பிற்குள்ளாக்கிய நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இதில் முருகனின் வலது கரமான மதுரை கணேசனை கைது செய்த போலீசார் நாங்களும் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணைதான் என மார்தட்டி கொண்டனர். இதில் சுரேஷின் நண்பர் மணிகண்டன் என்பவர் திருவாரூரில் சிக்கிய போது, அவரிடமிருந்து 4 கிலோ 800 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக டிஎஸ்பி கூறி இருந்தார்.

ஆனால் சுரேஷை கஸ்டடி எடுத்து விசாரித்த போலீசாரிடம், எனது பங்கு நகையான 6 கிலோவில் 1 கிலோ தங்கத்தை மதுரையில் உருக்கி ரூ.18 லட்சத்திற்கு விற்றதில் முதல் தவணை தொகையான ரூ.7 லட்சம் மற்றும் 5 கிலோ தங்கத்தை கொண்டு வரும் போது போலீசார் பிடித்தனர். ஆனால் 200 கிராம் (25 பவுன்) தங்கத்தை போலீசார் எடுத்து கொண்டதாக கூறி விசாரணை அதிகாரியை திடுக்கிட வைத்தார். இதில் டிஎஸ்பியிடம் விசாரிப்பதா அல்லது அப்போது அங்கிருந்த போலீசாரை விசாரிப்பதா என தெரியாமல் மலைக்கோட்டை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே கொள்ளை கும்பலிடம் கார் வாங்கிய எஸ்பி குறித்து பரபரப்பாக்கிய நிலையில் ஆட்டைய போட்ட 25 பவுன் நகை குறித்து யாரிடம் விசாரிப்பது என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

Related Stories: