என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1 முதல் ரத்து

மும்பை: சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் 2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, என்இஎப்டி முறையில் சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவதற்கான கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது எனவும், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: