ஈரானில் பூகம்பம்: 5 பேர் பலி

டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பூகம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈரானின் அசெர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரை நேற்று முன்தினம் திடீரென பூகம்பம் தாக்கியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.17 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது. 8கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு பூகம்பம் உருவாகி இருந்தது.

Advertising
Advertising

பூகம்பத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாகாண கவர்னர் முகமது ரிசா கூறுகையில், பூகம்பத்தினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளது. 41கிராமங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. என்றார். பூகம்பத்தில் சிக்கி 200 கால்நடைகள் உயிரிழந்தன.

Related Stories: