ஐந்து நாடுகள் பங்கேற்கும் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: நவ.13-ம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் பயணம் செல்லவுள்ளார். 2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது.  அதன்பிறகு 2008 மே 16-ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது. நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க,  ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16-ல் தொடங்கியது. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. 2010 டிசம்பர் 24-ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக்  கூட்டணியுடன் சேர்ந்தது. அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க எஸ் என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது. நான்காவது மாநாடு மார்ச் 29, 2012 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த ஆண்டு 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள  பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். ஐந்து நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது பற்றி அதில் விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார உறவுகள்) திருமூர்த்தி  தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: