திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செல்போன் சிக்னல் வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை

தஞ்சை: தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் மீது கடந்த 3ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள், சாணம் அடித்தும், கண்களை கறுப்பு பேப்பரால் மறைத்தும் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் திருவள்ளுவர் சிலை அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவிதம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் வகையில் போலீஸ் அனுமதியின்றி கூட்டமாக கூடுதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதலுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சிலை அவமதிப்பு குறித்து பிள்ளையார்பட்டியை சேர்ந்த கண்ணன் (47) கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்களை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் முயன்று வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யகோரி கரந்தை உமாமகேஸ்வரனார் கலை கல்லூரி முன் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 50 ேபர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென கோஷம் எழுப்பினர். இதேபோல், திருவள்ளுவர் சிலை முன் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், பிள்ளையார்பட்டியில் பாஜ மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்  தலைமையில் நிர்வாகிகள் திரண்டு திருவள்ளுவர் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம்  செய்தனர். 

Related Stories: