வங்கி மோசடி வழக்கு: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

டெல்லி: வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கி மோசடி தொடர்பாக தொடர்ந்து சிபிஐயின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு இந்தியா முழுவதும் வழக்குப்பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சுமார் 12 மாநிலங்களை இவர்கள் தேர்ந்தெடுத்து அதில் 100 கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி செய்திருக்கும் அந்த வழக்குகளை பட்டியலிட்டு இந்த அதிரடி சோதனையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 16 மாநிலங்களில் 35 வழக்குகளை தேர்ந்தெடுத்து சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட அந்த வங்கி தொடர்பான வழக்குகளை கையாண்டு தான் தற்போது இந்த சிபிஐ சோதனையானது நடைபெற்று வருகிறது.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்தந்த மாநில சிபிஐ அதிகாரிகளோடு, தொடர்பு வைத்துக் கொண்டு தொடர்ந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்திலும், போலி ஆவணங்கள், போலி நிறுவனங்களை வைத்து பல நுறு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்திலும், அந்தந்த வாங்கியே சிபிஐயிடம் பல புகார்கள் அளித்திருக்கின்றன. அதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, உள்பட பல்வேறு இடங்களில் இது போன்ற கூட்டுறவு வங்கிகள், இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் எல்லாம் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தில் உள்ள வங்கியின் தலைமை மண்டல மேலாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இதனை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்த சிபிஐ இது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்வதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த சோதனையில் வங்கியில் பணிபுரியும் மேலாளர்கள், தலைமை மேலாளர்கள், ஏற்கனவே ஒய்வு பெற்ற மேல்காலர்கள் இவர்கள் மூலமாக நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் அளவில் நடைபெற்ற மோசடிகளை குறிவைத்து சிபிஐ சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையானது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை இது தொடர்பாக முழு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: