தாகா: வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ். இவர் கிராமின் என்ற பெயரில் வங்கியை தொடங்கி சிறு, குறு கடன்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், பல தொழில் முனைவோர்களை உருவாக்கினார். இதனால் யூனுசுக்கு கடந்த 2006ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இந்நிலையில், கிராமின் வங்கியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்கள் முகமது யூனுசுக்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கடந்த ஜூலையில் வழக்கு தொடர்ந்தனர்.