டாடா நிறுவனத்திற்கு சொந்தமான 6 அறக்கட்டளைகளின் பதிவுகளை ரத்து செய்தது வருமானவரித்துறை

புதுடெல்லி: டாடா நிறுவனத்திற்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 6 அறக்கட்டளைகளின் பதிவுகளை வருமான வரித்துறை ரத்து செய்துள்ளது. ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட், ஆர்.டி.டாடா டிரஸ்ட், டாடா கல்வி டிரஸ்ட், டாடா சமூக முன்னேற்ற டிரஸ்ட் சர்வஜெனிக் சேவா டிரஸ்ட் மற்றும் நவஜ்பால் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை ரத்து செய்யப்பட்ட அறக்கட்டளைகளாகும். கடந்த 2015ம் ஆண்டு இந்த அறக்கட்டளைகளை தொடங்குவதற்காக வருமான வரித்துறையிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த அறக்கட்டளைகளை தொடங்குவதில் விருப்பம் இல்லை என்றும் டாடா அறக்கட்டளை தெரிவித்து விட்டதால் அறக்கட்டளைகள் பதிவுகளை வருமான வரித்துறை ரத்து செய்துள்ளது. டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைகளுக்கு வரித்துறை ஒழுங்கற்ற வரி விலக்குகளை வழங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக கருவூலத்திற்கு ரூ.1,066 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு அறக்கட்டளை அதன் உரிமத்தை ஒப்படைக்கும் போது, ​​இதுவரை அந்த அறக்கட்டளையின் மூலம் பெறப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதற்கு டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த விதியை டாடா டிரஸ்ட்ஸ் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. மேலும் 2015ம் ஆண்டில் அறக்கட்டளைகளை தொடங்க வருமான வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது டாடா நிறுவனம் சார்பாகவே இது கைவிடப்பட்டது. எனவே இந்த ஆறு அறக்கட்டளைகள் தங்கள் விருப்பத்தின் கீழ் சரணடைய செய்ததால், அதனுடன் தொடர்புடைய வருமான வரி விலக்குகளை வருமான வரித்துறை எங்களிடம் கோரக்கூடாது என்று அறக்கட்டளைகள் தெளிவுபடுத்த விரும்புகின்றன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: