வேலை நிறுத்தத்தை தொடருவது எங்கள் நோக்கம் அல்ல, நாங்கள் ஏற்கனவே கூறியது போல முதல்வர் தலையிட வேண்டும்: போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்

சென்னை: 6-வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிரேக் இன் சர்வீஸ் சட்டத்தை பயன்படுத்தினால் சட்டப்படி எதிர்க்கொள்வோம் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். 18 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் எனவும் கூறினார். வேலை நிறுத்தத்தை தொடருவது எங்கள் நோக்கம் அல்ல, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, முதல்வர் தலையிட வேண்டும் எனவும் கூறினார். சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்தார். 90% மருத்துவர்கள் வேலைக்கு வந்தால் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் ஏன்? என லட்சுமி நரசிம்மன் கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ந்நிலையில் தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. டாக்டர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: