போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ்: 6வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பணிக்கு வராத மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வேலைக்கு வராத அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடைக்க முயற்சி செய்வதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் 6வது நாளாக தொடரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. டாக்டர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: