ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்: 11 தலிபான்கள் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 தலிபான் தீவிரவாதிகள் பலியாகினர். இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் தரப்பில், ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 7 தலிபான் தீவிரவாதிகள் பலியாகினர். 8 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலிபான்களின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக ஆப்கான் பாதுகாப்புப் படை நடத்தும் தாக்குதலில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், ஆப்கானில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: